வால்பாறை வாலாட்டி
Grey Wagtail
சாம்பல் வாலாட்டி
(Motacilla Cinerea)
ஐரோப்பா மற்றும் இமயமலை பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் சாம்பல் வாலாட்டி(Grey Wagtail) பறவைகள் குளிர் காலங்களில் வலசையாக தமிழ்நாடு, கேரளா பகுதிகளுக்கு வருகை தரும்.
தமிழ்நாட்டில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் September மாதம் முதல் இவற்றின் வருகை அதிகரிக்கும்.
நீர்நிலைகள் உள்ள இடங்களில் இவற்றை அதிகம் காண முடியும்.
வால்பாறையில் இதன் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
சாம்பல் வாலாட்டிக்கு Posterகள்
அரசியல்வாதிகள்,சினிமா நடிகர்களுக்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளுக்கு மாற்றாக வால்பாறையில் இப்பறவையின் வருகையை வரவேற்று இளம் தலைமுறையினரான மாணவர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்தது..
மேலும் வால்பாறையில் உள்ள அரசுப்பள்ளியில் சாம்பல் வாலாட்டியின் வருகையை ஒட்டி இனிப்புகள் வழங்கி மாணவர்கள், ஆசிரியர்கள், வனத்துறையினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டாடினர்.
இந்நிகழ்வை மத்திய அரசின் பாடத்திட்டமான NCERT பாடப்புத்தகத்திலும் (Class 3)சேர்த்துள்ளனர்.
என் அனுபவத்தில் சாம்பல் வாலாட்டி
2023ஆம் ஆண்டு October மாதம் தமிழ்நாட்டில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் முக்கியமானதான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் வைத்து இதனை பார்த்தேன்..
ஒரு தண்ணீர் நிறைந்த குட்டையின் அருகே உள்ள புல்வெளியில் வாலை மேலும் கீழும் ஆட்டியபடி 50 அடி தூரத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் அதனை பின்தொடர்ந்து பார்த்து கொண்டிருந்தேன்..அதன் இணையான இன்னொரு வாலாட்டிம் அதனோடு சேர்ந்துக் கொண்டது.
பிறகு இருவரும் சேர்ந்தே வாலை ஆட்டிக்கொண்டே சென்றது அவ்வளவு அழகு ❤
-$heik
கருத்துகள்
கருத்துரையிடுக