இடுகைகள்

வால்பாறை வாலாட்டி

படம்
Grey Wagtail சாம்பல் வாலாட்டி (Motacilla Cinerea) ஐரோப்பா மற்றும் இமயமலை பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் சாம்பல் வாலாட்டி(Grey Wagtail) பறவைகள் குளிர் காலங்களில் வலசையாக தமிழ்நாடு, கேரளா பகுதிகளுக்கு வருகை தரும். தமிழ்நாட்டில் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் September மாதம் முதல் இவற்றின் வருகை அதிகரிக்கும். நீர்நிலைகள் உள்ள இடங்களில் இவற்றை அதிகம் காண முடியும்.  வால்பாறையில் இதன் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. சாம்பல் வாலாட்டிக்கு Posterகள் அரசியல்வாதிகள்,சினிமா நடிகர்களுக்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளுக்கு மாற்றாக வால்பாறையில் இப்பறவையின் வருகையை வரவேற்று இளம் தலைமுறையினரான  மாணவர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்தது..       மாணவரால் ஒட்டப்படும் Poster மேலும் வால்பாறையில் உள்ள அரசுப்பள்ளியில் சாம்பல் வாலாட்டியின் வருகையை ஒட்டி இனிப்புகள் வழங்கி மாணவர்கள், ஆசிரியர்கள், வனத்துறையினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டாடினர். இந்நிகழ்வை மத்திய அரசின் பாடத்திட்டமான NCERT பாடப்புத்தகத்திலும் (Class ...

மேற்கு தொடர்ச்சி மலை

படம்
கன்னியாகுமரி முதல் குஜராத் வரை 1600 கி.மீ வரை பரவி கிடக்கும்  மேற்கு தொடர்ச்சி மலை(Western Ghat) இந்தியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. உலகில் பல்லுயிர் வளம் கொண்ட எட்டு இடங்களில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.மேலும் UNESCOவின் பாரம்பரிய தளமாகவும் இம்மலை விளங்குகிறது. கோதையாறு மேற்கு தொடர்ச்சி மலை, கன்னியாகுமரி . ©$heik வளங்கள் இங்கு 7000க்கும் அதிகமான பூக்கும் தாவரங்களும், 1800 வகை பூக்காத தாவரங்களும்,508 வகை பறவையினங்களும், 139 வகை பாலூட்டிகளும், 179 வகை நீர், நில வாழ்வனைகளும் மேலும் பல வகை பூச்சிகளும், மீன்களும், மூலிகைச் செடிகளும் இம்மலையில் இருக்கின்றன.பல்வகை வனவளம், கனிமவளம் என இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் வளங்கள் கொட்டி கிடக்கிறது. Image © Abdul Hakeem இம்மலையில் மட்டும் 14 தேசிய பூங்காக்கள், 44 காட்டுயிர் சரணாலயங்கள் மற்றும் 11 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில்தான் யானைகள் அதிகம் இருக்கின்றன.அதுபோல உலகின் புலிகள் எண்ணிக்கையில் 25% புலிகள் மேற்கு தொடர்ச்சி மலையில்தான் இருக்கின்றன. Lion Tailed Macaque எனும் சோலை மந்தி, Nilgiri T...

இருவாச்சி

படம்
Indian Great Hornbill - மலை இருவாச்சி     இனம் :   Buceros bicornis மலை இருவாச்சி என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இருவாச்சி குடும்பத்தில் மிகப்பெரிய பறவை இதுவாகும்.  இப்பறவையின் ஆயுட்காலம் ஏறக்குறைய 50 ஆண்டுகள் ஆகும். உருவ அமைப்பில் பெரிதாக உள்ள இப்பறவைகள், நீளமான வளைந்த அலகை கொண்டுள்ளன. 95 முதல் 130 செ.மீ நீளமும் ,2.30 முதல் 4 கிலோ வரை எடையும் கொண்டது. ஆசிய இருவாச்சிகளிலேயே எடை மிகுந்த பறவை இதுவாகும். பெண் பறவைகள் அளவில் சிறியவையாக இருக்கும். மரங்களில் வசிக்கும் இந்தப் பறவைகள் பழங்கள், பூச்சிகள், சிறு பிராணிகள் போன்றவை உணவாகக் கொள்கின்றன. இவை இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கீழ் இமயமலைப் பகுதிகள், வடகிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. இப்பறவை கேரளா மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களின் மாநிலப்பறவையாக விளங்குகிறது. ஆண், பெண் ஜோடியாக சேர்ந்து வாழும். பெரும்பாலும் இந்த இணை சாகும் வரை பிரிவது கிடையாது என்பது வியப்பான ஒன்று. பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவையுடன் சேர்ந்து பெரிய பொந்தைக் கொண்ட உயர்ந்த மரத...