இருவாச்சி
Indian Great Hornbill - மலை இருவாச்சி இனம் : Buceros bicornis மலை இருவாச்சி என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இருவாச்சி குடும்பத்தில் மிகப்பெரிய பறவை இதுவாகும். இப்பறவையின் ஆயுட்காலம் ஏறக்குறைய 50 ஆண்டுகள் ஆகும். உருவ அமைப்பில் பெரிதாக உள்ள இப்பறவைகள், நீளமான வளைந்த அலகை கொண்டுள்ளன. 95 முதல் 130 செ.மீ நீளமும் ,2.30 முதல் 4 கிலோ வரை எடையும் கொண்டது. ஆசிய இருவாச்சிகளிலேயே எடை மிகுந்த பறவை இதுவாகும். பெண் பறவைகள் அளவில் சிறியவையாக இருக்கும். மரங்களில் வசிக்கும் இந்தப் பறவைகள் பழங்கள், பூச்சிகள், சிறு பிராணிகள் போன்றவை உணவாகக் கொள்கின்றன. இவை இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கீழ் இமயமலைப் பகுதிகள், வடகிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. இப்பறவை கேரளா மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களின் மாநிலப்பறவையாக விளங்குகிறது. ஆண், பெண் ஜோடியாக சேர்ந்து வாழும். பெரும்பாலும் இந்த இணை சாகும் வரை பிரிவது கிடையாது என்பது வியப்பான ஒன்று. பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவையுடன் சேர்ந்து பெரிய பொந்தைக் கொண்ட உயர்ந்த மரத...